மாதாந்திர பராமரிப்பு பணிகள்:சமயநல்லூர், வலையப்பட்டி பகுதியில் மின்தடை


மாதாந்திர பராமரிப்பு பணிகள்:சமயநல்லூர், வலையப்பட்டி பகுதியில் மின்தடை
x

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சமயநல்லூர், வலையபட்டி பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.

மதுரை

வாடிப்பட்டி,

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சமயநல்லூர், வலையபட்டி பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.

வலையப்பட்டி

சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் வலையப்பட்டி பீடர், தேவசேரி பீடர்கள் மற்றும் சோழவந்தான் துணை மின் நிலையத்தில் வாட்டர் ஒர்க்ஸ் பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதனால் மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், குறவன் குளம், முடுவார்பட்டி, தேவசேரி, ஆதனூர், பண்ணைக்குடி, மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன் மற்றும் இரும்பாடி பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

சமயநல்லூர்

மேலும் சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதனால் சமயநல்லூர், தேனூர், கட்டபுளிநகர், தேடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை மெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்ன கவுண்டன்பட்டி, சிறுவாலை பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

இந்த தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.


Next Story