இயற்கையை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்


இயற்கையை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்
x

இயற்கையை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்:

இயற்கையை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

பருவகால மாற்றம்

தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் உதவிக்கரம் கல்வி பயிலகத்தில் நடந்த வானிலை மாற்றம் குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் எஸ்.ஆர். ரமணன் மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு பருவநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நிரந்தரமாக அமையும் என சொல்ல முடியாது. பருவ கால மாற்றத்தை பொறுத்தே நிகழும்.

ஈரப்பதம்

பைபோர் ஜாய் என்ற புயல் பருவ மழை தொடங்கும் நேரத்தில் உருவாகி குஜராத், ராஜஸ்தான் என வடக்கு நோக்கி வீசியதில் ஈரப்பதம் முழுமையாக இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் கேரள மாநிலத்தில் ஜூன் மாதத்தில் மழை இல்லை. ஜூலை மாதத்தில் ஓரளவு மழை பெய்தது. அதற்குப் பிறகு மழை இல்லாத நிலையே கேரளாவில் உள்ளது.

கர்நாடகாவிலும் மழை குறைவாகவே பெய்துள்ளது. குளிர் காலங்களில் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில் ஐரோப்பாவில் இருந்து வரக்கூடிய மேற்கத்திய சலனங்கள் மழையை தரும். பருவ மழை காலத்தில் அவை இருக்காது. ஆனால் இந்த ஆண்டு பருவ மழை காலத்தில் மேற்கத்திய சலனங்களும் சேர்ந்தே வந்ததால் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் அதிக மழை பொழிந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிக கவனம் செலுத்த வேண்டும்

பருவக்காற்றின் தாழ்வு நிலை கடந்த வாரம் இமயமலைப் பகுதியை நோக்கிச் சென்றது. இதனால் இந்தியாவில் பெரிய அளவிற்கு மழை இல்லாமல் போய்விட்டது. கேரளாவில் மழை பெய்தால் தமிழகத்திற்கு நல்லது. இயற்கையை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இ்வ்வாறு அவர் கூறினார்.


Next Story