1½ வயது குழந்தையை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை


1½ வயது குழந்தையை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x

1½ வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். இவருடைய மகள் பிரவீணா (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகேந்திரன் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 1½ வயதில் அகிமா என்ற பெண் குழந்தை இருந்தது.

தாய் வீடு அருகே உள்ளதால் பிரவீணா அடிக்கடி அங்கு சென்று வருவார். நேற்று முன்தினம் தனது தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர்.

தூக்கில் பிணமாக தொங்கினர்

மாலையில் பிரவீணாவின் தாய் பாப்பா வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பிரவீணாவும், குழந்தை அகிமாவும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாப்பா கதறி அழுதார்.

இதுகுறித்து அறிந்த தேவர்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பிரவீணா தனது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பிரவீணா குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story