மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் வெங்கமேடு கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், மோட்டார் சைக்கிளை திருடியது குளித்தலை அருகே உள்ள வேலம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story