காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி


காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி
x

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

வேலூர்

காட்பாடியில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் கடலூரையும் சித்தூரையும் இணைக்கும் மேம்பாலம் ஆகும். இந்த வழியாகத்தான் சித்தூர் மற்றும் ஆந்திராவுக்கு செல்லும் லாரிகள், பஸ்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் ரெயில்வே மேம்பாலம் ரூ.2 கோடியில் சீரமைக்கப்பட்டது. மேம்பாலத்தில் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மேம்பாலத்தில் உள்ள விளக்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story