பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தல்


பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தல்
x

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தினர்.

பெரம்பலூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தினசரி நோயாளிகளுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள அனைத்து துறைக்கும் நிரந்தர சிறப்பு மருத்துவர்களை நியமனம் செய்திட வேண்டும். பெரம்பலூர் நகராட்சியின் அனைத்து விரிவாக்க பகுதியிலும் பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்திட வேண்டும். நகராட்சி அனைத்து வார்டுகளிலும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை செப்பணிட வேண்டும். ரேஷன் கடைகளில் தடையின்றி கோதுமை, மண்எண்ணெய், அரிசி வழங்கிட வேண்டும். பெரம்பலூரில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்களை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் போலீஸ் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாதந்தோறும் தொடர்ந்து போராட்டத்தை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story