கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்
நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும் என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் நிலைநிறுத்துவோம் என்று டிடிவி தினகரன் கூறினார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எண்ணிலடங்கா துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்த போதிலும் அன்பு தான் உலகின் ஆகப்பெரிய சக்தி என்பதை நிரூபித்து அதன் வழியாகவே இவ்வுலகை வென்றெடுத்தவர் இயேசுநாதர். பேரன்பையும் நல் சமாதானத்தையும் உலகெங்கும் பரப்பும் நாளாக அமைந்திருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை. உலக சகோதரத்துவத்தையும், உண்மையான வாழ்வியல் தத்துவத்தையும் நம் அனைவருக்கும் உணர்த்துகிறது.
நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதையே மற்றவர்களுக்கும் நாம் செய்ய வேண்டும் என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் நிலைநிறுத்துவோம்.
அனைவரிடமும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இந்த திருநாளில் அவர் போதித்த அன்பு. எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.