நாகம்பட்டி மனோ கல்லூரியில்சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்


நாகம்பட்டி மனோ கல்லூரியில்சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 23 Feb 2023 6:46 PM GMT)

நாகம்பட்டி மனோ கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள நாகம்பட்டி மனோ கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் காசிராஜன் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடக்கி வைத்து பேசினார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் வேல்ராஜ் வரவேற்று பேசினார். சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் வக்கீல்கள் ராஜேஷ், கண்ணன், பாண்டீஸ்வரி ஆகியோர் மாணவ, மாணவியருக்கு போக்சோ, ஈவ்டீசிங், குண்டர்சட்டம், பெண்கள் பாதுகாப்பு, சொத்துரிமை போன்ற சட்டங்களைப் பற்றி எடுத்துரைத்தனர்.

இதில் தமிழ் துறைத்தலைவர் சேதுராமன் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வணிகவியல் துறைத்தலைவர் வினோத் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழ்துறை பேராசிரியை பவானி தொகுத்து வழங்கினார்.


Next Story