திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் நாட்டியாஞ்சலி விழாவில் 50 நாட்டிய குழுவினர் பங்கேற்பு
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் நாட்டியாஞ்சலி விழாவில் 50 நாட்டிய குழுவினர் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா 3 நாட்கள் நடந்தது. விழாவுக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கலந்து கொண்டு நாட்டிய கலைஞர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாக்குழு தலைவர் செல்வகணபதி, செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் மணிமாறன் வரவேற்றார். மாரிமுத்து எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் கவிதாபாண்டியன், தாசில்தார் மலர்க்கொடி, முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார், ஆன்மீகம்ஆனந்தம் அமைப்பின் நிறுவனர் கனகராஜன், நகராட்சி உறுப்பினர் எழிலரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உழவார பணிக் குழு செயலர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார். விழாவையொட்டி 2 ஆயிரம் சிவ பக்தர்களுக்கு ருத்ராட்சம் வழங்கப்பட்டது. நாட்டியாஞ்சலி விழாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாட்டிய குழுவினர் பங்கேற்றனர்.