பாபநாசம் 108 சிவாலய ராமலிங்கசாமி கோவிலில் நாட்டியாஞ்சலி விழா


பாபநாசம் 108 சிவாலய ராமலிங்கசாமி கோவிலில் நாட்டியாஞ்சலி விழா
x

பாபநாசம் 108 சிவாலய ராமலிங்கசாமி கோவிலில் நாட்டியாஞ்சலி விழா

தஞ்சாவூர்

பாபநாசம் 108 சிவாலய ராமலிங்க சாமி கோவில் வளாகத்தில் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி துணைத்தலைவர் பூபதிராஜா தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் விஸ்வநாதன், பொருளாளர் லட்சுமணன், செயலாளர் அருண்குமார், துணைத்தலைவர் மாஸ்கோ உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். விழாவை பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி ஹாசினி, ஆய்வாளர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். விழாவில் திருச்சி, குடந்தை, அம்மாப்பேட்டை, திருவனந்தபுரம், பாபநாசம், பெங்களூரு, கோயம்புத்தூர், சென்னை, நாகப்பட்டினம், ஆண்டான்கோவில் ஆகிய ஊர்களை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு விடிய, விடிய நடனமாடினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நாட்டியாஞ்சலியை கண்டுகளித்தனர். முன்னதாக பரதநாட்டிய கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story