சாத்தான்குளம் அருகே தனியார் ஆக்கிரமிப்பிலிருந்தஅரசு நிலம் மீட்பு


சாத்தான்குளம் அருகே தனியார் ஆக்கிரமிப்பிலிருந்தஅரசு நிலம் மீட்பு
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த அரசு நிலம் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகிலுள்ள நடுவக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தம்மாள்பத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான 5 செண்டு இடத்தை 2 தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி அடைத்து வைத்திருந்தனர். இது குறித்து இந்து முன்னணி சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலர் மாயவன முத்துசாமி, மாவட்ட கலெக்டர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதை தொடர்ந்து சாத்தான்குளம் தாசில்தார் அறிவுறுத்தலின் பேரில் பள்ளக்குறிச்சி பிர்கா நில அளவையர் அய்யாத்துரை, வருவாய் அலுவலர் வெயிலுகந்தநாயகி, நடுவக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், கிராம உதவியாளர் சரவணண் ஆகியோர் கடந்த வாரம் ஆக்கிரமிப்பிலிருந்த இடத்தை அளவீடு செய்தனர். சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததுடன், வேலியை அகற்ற உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் வேலியை தாங்களாகவே அகற்றி கொண்டனர். அந்த நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். இந்த இடத்தை ஊராட்சித் தலைவர் சபிதா செல்வராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.


Next Story