சத்தி அருகேபுலித்தோல், பற்கள் பதுக்கிய வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது


சத்தி அருகேபுலித்தோல், பற்கள் பதுக்கிய வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது
x

சத்தியமங்கலம் அருகே புலித்தோல், பற்கள் பதுக்கி வைத்ததாக வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே புலித்தோல், பற்கள் பதுக்கி வைத்ததாக வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

புலித்தோல், பற்கள்

சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் பகுதியில் கூடாரம் அமைத்து சிலர் சந்தேகப்படும்படி தங்கி உள்ளதாக சத்தியமங்கலம் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர்களது உத்தரவின்பேரில் வனச்சரகர் பழனிச்சாமி மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 2 பைகள் கிடந்தது. அந்த பைைய வனத்துறையினர் திறந்து பார்த்தனர். அதில் 7 அடி நீளம் 4 அடி அகலம் உள்ள பெரிய புலி தோல் மற்றும் புலிகளின் பற்கள் மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் உள்ள எலும்புகள் இருந்தது.

பதுக்கியவர்கள் கைது

இதைத்தொடர்ந்து அங்கு தங்கியிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம் சங்கர் (வயது 50), பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (59), மங்கள் (28), ரத்தனா (40) ஆகியோர் என்பதும், இவர்கள் புலியை வேட்டையாடி அதன் தோல், பற்கள் மற்றும் எலும்புகளை சத்தியமங்கலம் அரசூர் பகுதியில் கூடாரம் அமைத்து பதுக்கி வைத்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து புலித்தோல், பற்கள், எலும்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து சத்தியமங்கலம் வனத்துறை அலுவலகம் கொண்டு சென்றனர். இவர்கள் 4 பேரும் ஏன் சத்தியமங்கலம் பகுதிக்கு வந்தார்கள்? எங்கு புலியை வேட்டையாடினார்கள்? என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story