நெமிலி பேரூராட்சி கூட்டம்
நெமிலி பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி சரவணன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடிக்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக மாற்றவேண்டும், குடிநீர் வசதி, கழிவு நீர் கால்வாய் பராமரிப்பு, தெரு விளக்கு உள்ளிட்டவற்றில் தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரசேகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story