செங்கல்பட்டில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு வளாகம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்


செங்கல்பட்டில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு வளாகம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
x

அரசு நலத்திட்ட உதவிகளாக 5 நபர்களுக்கு ரூ. 13.80 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு பொன்விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் "டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை அறிவித்து இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் 18.02.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 கிராம ஊராட்சிகளுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சிகளுக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 784 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். பின்னர் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் புதிய விளையாட்டு வளாகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளாக 5 நபர்களுக்கு ரூ. 13.80 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, 5 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தலா ரூ. 13,500 மதிப்பில் ஸ்மார்ட் போன், செங்கல்பட்டு மாவட்ட அளவில் சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவு போட்டியில் வெற்றிபெற்ற 8 சுயஉதவிக் குழுக்களுக்கு பரிசுத்தொகை, மாவட்ட அளவில் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடனுதவி வழங்கிய சிறந்த வங்கிகளுக்குப் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


Next Story