வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மல்லாங்கிணறில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார். கருணாநிதி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். திருச்சுழி, விருதுநகர், சிவகாசி ஆகிய 3 தொகுதிகளிலும் 2 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வனராஜா, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் பொன்னுத்தம்பி, ப.பா.போஸ்த்தேவர், காரியாபட்டி கண்ணன், நரிக்குடி கு.கண்ணன், சந்தனப்பாண்டி, பேரூராட்சி தலைவர்கள் செந்தில், துளசிதாஸ், மாவட்ட கவுன்சிலர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story