வாகனம் மோதி வடமாநில வாலிபர் பலி


வாகனம் மோதி வடமாநில வாலிபர் பலி
x

தூசி அருகே வாகனம் மோதி வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

தூசி

ஜார்க்கண்ட் மாநிலம் கிருத்திக் மாவட்டம் களகாபாத் கிராமத்தைச் சேர்ந்த சுகன் மாஞ்சி என்பவருடைய மகன் தீபக் (வயது 23).

இவர் தூசி அருகே அழிஞ்சல்பட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்படும் தனியார் கம்பெனியில் கட்டிட வேலை பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் தீபக் கடந்த 19-ந் தேதி கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். நரசமங்கலம் கிரஷர் ரோட்டில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தனியார் கம்பெனி மேலாளர் பிரபாகரன் தூசி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story