தரமற்ற உணவு பொருட்கள் விற்ற வியாபாரிகளுக்கு நோட்டீசு


தரமற்ற உணவு பொருட்கள் விற்ற வியாபாரிகளுக்கு நோட்டீசு
x

தரமற்ற உணவு பொருட்களை விற்ற வியாபாரிகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் நகராட்சி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகள், டீக்கடைகள், இனிப்பு கடைகள், பேக்கரிகள், குளிர்பான கடைகள், ஓட்டல்கள் மற்றும் காய்கறி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன், இளநிலை உணவு பகுப்பாய்வாளர் சரவணன் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 60-க்கும் மேற்பட்ட உணவு பொருட்களின் தரம் குறித்து நடமாடும் உணவு பரிசோதனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஒரு சில உணவு பொருட்கள் தரம் குறைந்து இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. மேலும் இது போன்று தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டது. ஆய்வின்போது வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story