பெண்ணின் படம் ஆபாசமாக சித்தரிப்பு; மேலும் ஒருவர் கைது
பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் தனது படத்தை மர்மநபர்கள் சிலர் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பி வருவதாக தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மேற்பார்வையில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கடந்த ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எஸ்.வி. காலனியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 25) என்பவரை கைது செய்து இருந்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரான ராமநாதபுரம் பாரதியார்நகரை சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story