பழனி சண்முகநதியில் அதிகாரிகள் ஆய்வு
விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிற பழனி சண்முக நதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல்
விநாயகர் சதுர்த்தி நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பழனி பகுதியில், இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து சென்று சண்முகநதியில் கரைப்பது வழக்கம்.
இந்தநிலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கும் இடம், ஊர்வல பாதை மற்றும் கரைக்கும் இடமான சண்முகநதி பகுதியில் ஆர்.டி.ஓ. சிவக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது சிலைகள் கரைக்கும் இடத்தில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். ஆய்வின்போது, தாசில்தார் சசிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் உதயக்குமார், மகேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story