கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கைப்பந்து போட்டி


கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:46 PM GMT)

கமல்ஹாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கைப்பந்து போட்டி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு, போஸ் நகர் மைதானத்தில் கமல்ஹாசன் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் மின்னொளி கைப்பந்து போட்டி நடந்தது. போட்டியில் 40 அணிகள் பங்கேற்றன. போட்டியை வி. கருணாகரராஜா தொடங்கி வைத்தார்.

இறுதிப் போட்டியில் கோவில்பட்டி சுபா கைப்பந்து அணியும், கோவில்பட்டி வாரியர்ஸ் கைப்பந்து அணியும் மோதியது. இதில் சுபா கைப்பந்து அணி 30- 25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 3, 4-வது இடத்திற்கான போட்டியில் சிவகாசி எம்.ஆர்.பி. அணியும், கோவில்பட்டி ரவிக்குமார் நினைவு கைப்பந்து அணியும் மோதின. இதில் சிவகாசி அணி 30-22 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கமல் ரமேஷ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அணி மாவட்ட பொறுப்பாளர் கே. பாலமுருகன், மத்திய ஒன்றிய செயலாளர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு செய்தி மற்றும் ஊடகப்பிரிவு நெல்லை மண்டல அமைப்பாளர் யோகேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் கதிரவன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். மாவட்ட பொருளாளர் அருண் நன்றி கூறினார்.


Next Story