அரசு பஸ் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி


அரசு பஸ் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
x

டயர் வெடித்து நின்று கொண்டு இருந்த அரசு பஸ் மீது லாரி மோதியதில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

டயர் வெடித்து நின்று கொண்டு இருந்த அரசு பஸ் மீது லாரி மோதியதில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒருவர் சாவு

கரூரில் இருந்து அரசு பஸ் திருச்செந்தூர் ேநாக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ் காரியாபட்டி, கல்குறிச்சி அருகே பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்பக்க டயர் திடீரென வெடித்தது. உடனே டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டு வெடித்த டயரை மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி பஸ் மீது மோதியதில் பஸ்சின் முன்னாள் நின்றுகொண்டிருந்த ஈரோடு மாவட்டம் பாசூரைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 51) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி இறந்தார்.

3 பேர் படுகாயம்

மேலும் இந்த விபத்தில் நாமக்கல் மாவட்டம் பண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (58) உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story