ஈரோட்டில் சூறாவளி காற்றுக்கு சாய்ந்த நெல் பயிர்கள்
ஈரோட்டில் சூறாவளி காற்றுக்கு நெல் பயிர்கள் சாய்ந்தன.
ஈரோடு:
ஈரோட்டில் சூறாவளி காற்றுக்கு நெல் பயிர்கள் சாய்ந்தன.
நெல்பயிர் சாய்ந்தது
ஈரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. காற்று வேகமாக வீசியதால் பல இடங்களில் விளம்பர பலகைகள் சாய்ந்தன. ஈரோடு காலிங்கராயன் பாசன பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டில் குளம் போல மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள் உள்பட காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களும் சிரமம் அடைந்தார்கள். மேலும், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள கல்யாண விநாயகர் கோவிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
மழை அளவு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
தாளவாடி - 58
ஈரோடு - 44
கவுந்தப்பாடி -37.2
கோபிசெட்டிபாளையம் - 28
பவானிசாகர் - 15.6
கொடிவேரி - 15
குண்டேரிப்பள்ளம் - 7.8
பவானி - 4.2
பெருந்துறை - 4
மொடக்குறிச்சி - 4
சென்னிமலை - 2
வரட்டுப்பள்ளம் - 2