கம்பன் விழாவில் ஓவிய கண்காட்சி-பட்டிமன்றம்


கம்பன் விழாவில் ஓவிய கண்காட்சி-பட்டிமன்றம்
x

கம்பன் விழாவில் ஓவிய கண்காட்சி-பட்டிமன்றம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 44-வது கம்பன் விழா ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கம்பன் கழகத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.எஸ்.மணியன் தலைமை வகித்தார். கே.எம்.சுப்பிரமணியம் வரவேற்றார். இதனையொட்டி பள்ளி கம்பராமாயணம் பற்றி மாணவ, மாணவிகளின் ஓவிய கண்காட்சியும், அதன்பின் கல்வெட்டுகளின் நிழற்பட காட்சி நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சென்னை பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் மோகன்காந்தி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசினர். தொடர்ந்து சுகிசிவம் நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது. ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் ெவற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பங்கேற்ற உரையரங்கம் நடந்தது. முன்னதாக எஸ்தர் ஜெகதீஸ்வரி, கலைமாமணி முத்தையா, கவிஞர்கள், ஆத்தூர் சுந்தரம், நா.சியாமளா, மு பாலசுப்பிரமணியம் ஆகியோர் பேசினர். மேலும் புலவர் ராமலிங்கம் நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள், தமிழ்ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story