பாரதமாதா நினைவாலய பூட்டை பா.ஜனதாவினர் உடைத்ததால் பரபரப்பு


பாரதமாதா நினைவாலய பூட்டை பா.ஜனதாவினர் உடைத்ததால் பரபரப்பு
x

பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலய கேட் பூட்டை பா.ஜனதாவினர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:-

பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலய கேட் பூட்டை பா.ஜனதாவினர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரதமாதா நினைவாலயம்

சுதந்திர தின அமுதபெருவிழாவையொட்டி நேற்று மாலையில் பா.ஜனதாவினர் ஊர்வலம் நடத்தினர்.

இந்த ஊர்வலத்தில் முன்னாள் எம்.பி. ராமலிங்கம் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் மற்றும் பா.ஜனதாவினர் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாரதமாதா நினைவாலயத்துக்கு மாலை அணிவிக்க நேற்று மாலை சென்றனர்.

பூட்டு உடைப்பு

அப்போது பாரதமாதா நினைவாலயத்தின் கேட் பூட்டப்பட்டு இருந்தது. கேட்டை திறக்குமாறு மணிமண்டப காப்பாளரிடம்கேட்டனர்.

அப்போது காப்பாளர் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினார். தொடர்ந்து நினைவாலய கேட் முன்பு மாலை அணிவித்து விட்டு சுப்ரமணிய சிவா சமாதியில் மாலை அணிவித்தனர்.

பின்னர் அவர்கள் பாரதமாதா நினைவாலய கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்து கோஷமிட்டனர். பின்னர் தாங்கள் கொண்டுவந்த ஒரு பூட்டை நினைவாலய கேட்டில் மாட்டி விட்டுச்சென்றனர்.

பரபரப்பு

தகவல் அறிந்த பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவர்மன் பாரதமாதா நினைவாலயத்தை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நினைவாலய கேட் பூட்டை உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.


Next Story