வீரட்டானேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி


வீரட்டானேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள சிவானந்தவல்லி உடனுறை விரட்டானேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழா இந்த ஆண்டும் வழக்கம் போல் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு நேற்று முன்தினம் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் சிவாச்சாரியார்கள் பந்தக்கால் முகூர்த்தம் செய்து சாமிக்கு பூஜை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் விழா குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னின்று செய்திருந்தனர்.


Next Story