வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த காகித ஆலை தொழிலாளி பலி


வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த காகித ஆலை தொழிலாளி பலி
x

வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த காகித ஆலை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கரூர்

வேலாயுதம்பாளையம்,

காகித ஆலை தொழிலாளி

கரூர் மாவட்டம், புகழூர் வள்ளுவர் நகர் விஷால் கார்டனில் உள்ள விடிபி மேன்சனில் உள்ள 2-வது தளத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தவர் சக்திவேல் (வயது 44). இவர் புகழூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி சந்தானலட்சுமி (34). இந்நிலையில் சக்திவேலுக்கு தான் குடியிருக்கும் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள சுவற்றில் உட்கார்ந்து கொண்டு சிகரெட் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது.

மாடியில் இருந்து விழுந்தார்

இந்நிலையில் இரவு அவரது மனைவி சந்தானலட்சுமி தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது சக்திவேல் மொட்டை மாடியில் கட்டில் போட்டு தூங்கி கொண்டு இருந்தார்.இந்நிலையில் காலை 6 மணி அளவில் சக்திவேல் குடியிருக்கும் வீட்டின் பின்புறம் குடியிருக்கும் கார்த்திகேயன் என்பவர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது சக்திவேல் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் கார்த்திகேயனின் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்து சக்திவேல் மீது விழுந்ததில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கீழே கிடந்ததை கார்த்திகேயன் பார்த்துள்ளார்.

பலி

இதையடுத்து கார்த்திகேயன் சத்தம் போடவே சந்தானலட்சுமி மற்றும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பலத்த காயத்துடன் சக்திவேல் மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சக்திவேலை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து சந்தானலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story