லாரி மோதி காகித ஆலை தொழிலாளி படுகாயம்


லாரி மோதி காகித ஆலை தொழிலாளி படுகாயம்
x

லாரி மோதி காகித ஆலை தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

கரூர்

புகழூர் திருவள்ளூர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 53). இவர் புகழூர் காகித ஆலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நாகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் மூலிமங்கலம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் கான்கிரீட் கலவைகளை கொண்டு வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக நாகராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், லாரி டிரைவர் பரமத்தி வேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவர் மீது ேவலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர்.


Next Story