10-ம் வகுப்பு மாணவி கர்ப்பமானதால் பெற்றோர் அதிர்ச்சி


10-ம் வகுப்பு மாணவி கர்ப்பமானதால் பெற்றோர் அதிர்ச்சி
x

வந்தவாசி அருகே 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆனதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக 12-ம் வகுப்பு மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆனதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக 12-ம் வகுப்பு மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

7 மாத கர்ப்பம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதி பள்ளியில் 17 வயதான மாணவர் 12-ம் வகுப்பு படிக்கிறார். உறவினர்களான இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவியின் உடலில் திடீரென மாற்றம் தெரிந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் நேற்று வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மாணவன் மீது வழக்கு

இதைடுத்து மாணவிக்கு பரிசோதனை செய்ய திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அங்கு மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

மேலும் அவர் சிறுமியாக இருப்பதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாணவி அளித்த புகாரின் பேரில் 12-ம் வகுப்பு மாணவன் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அது குறித்து மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story