பா.ராமச்சந்திர ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


பா.ராமச்சந்திர ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

மாலைமுரசு நாளிதழ் நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காயாமொழியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

மாலைமுரசு நாளிதழ் நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு காயாமொழியில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஊர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், ராகவ ஆதித்தன், குமாரசாமி ஆதித்தன், கார்த்திகேய ஆதித்தன், எஸ்.எஸ் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், முருகன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், அசோக்குமார் ஆதித்தன், குமரேச ஆதித்தன் தனிகேச ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், ராமானந்த ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் அமிர்தலிங்கம், பிச்சையாண்டி பிள்ளை, தளவாய் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story