உரிமையாளருக்கு அபராதம்


உரிமையாளருக்கு அபராதம்
x

உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக மாடுகள் திரிந்து வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெருமளவில் காயம் அடைகிறார்கள். இதனை தடுக்க சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தநிலையில் நேற்று சிவகாசியில் போக்குவரத்து இடையூறாக திரிந்த 2 மாடுகளை மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் பிடித்து மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டி வைத்தார். பின்னர் மாட்டின் உரிமையாளர் முத்துகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் மாநகராட்சி அலுவலகம் வரவழைக்கப்பட்டு அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story