மேலூர், வாடிப்பட்டியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மேலூர், வாடிப்பட்டியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மேலூர், வாடிப்பட்டியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை

மேலூர்,

மேலூர், வாடிப்பட்டியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக்கிளை துணைத்தலைவர்கள் தனபாக்கியம், அருணாச்சலம், இணைச்செயலாளர்கள் சந்திரசேகரன், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர்கள், ஊரக நூலகர்கள், கிராம உதவியாளர்கள், வனத்துறை ஊழியர்கள் உள்பட சிறப்பு ஓய்வு ஊதியம் பெறுவோர்களுக்கு குறைந்தபட்சம் 7,850 ரூபாயாக ஓய்வு ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

வட்ட செயலாளர் மலைச்சாமி, மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், இணைச்செயலாளர் அடைக்கன், அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்க மேலூர் கிளை செயலாளர் மனோகரன், பொருளாளர் ஜபார் உள்பட ஏராளமான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி வட்டக் கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர், ஊர்புற நூலகர்கள், கிராம உதவியாளர்கள், வனத்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7850 வழங்க கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் மணி தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், காமாட்சி, இணைச்செயலாளர்கள் ஆறுமுகம், சுந்தர லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச்செயலாளர் வேல்மயில், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், இணைச்செயலாளர் பானு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். முடிவில் வட்ட கிளை பொருளாளர் பாண்டியம்மாள் நன்றி கூறினார்.


Next Story