மீன்மார்க்கெட்டில் மக்கள் வருகை குறைவு


மீன்மார்க்கெட்டில் மக்கள் வருகை குறைவு
x

மீன்மார்க்கெட்டில் மக்கள் வருகை குறைவு

திருப்பூர்

திருப்பூர்

வார விடுமுறை நாட்களில் திருப்பூர் தென்னம்பாளையம் மீன்மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் விடுமுறை நாளான நேற்று சிவராத்திரியையொட்டி மக்கள் மீன் வாங்க குறைவாகவே வந்திருந்தனர். வழக்கத்தை விட நேற்று மீன்வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் மக்கள் வருகை குறைவால் மீன்களின் விலையும் குறைந்தது.

மீன்களின் விலை விபரம்:- பெரிய வஞ்சிரம் ரூ.750, சிரிய வஞ்சிரம் ரூ.450, வெல மீன் ரூ.350, பாறை மீன் ரூ.450, அயில ரூ.150, மத்தி ரூ.80, வாலை முரல் ரூ.250, இறால் ரூ.400, நண்டு ரூ.300 ஆகிய விலைகளில் விற்கப்பட்டது. மக்கள் வருகை குறைவால் வியாபாரம் பாதித்துள்ளதாக மீன் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.Next Story