பயன்பாட்டில் இல்லாத குடிநீர் தொட்டிகள்


பயன்பாட்டில் இல்லாத குடிநீர் தொட்டிகள்
x
தினத்தந்தி 29 March 2023 7:00 PM GMT (Updated: 29 March 2023 7:00 PM GMT)

குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டில் இல்லாதது மக்களை அவதிப்படுத்தி வருகிறது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகள், 193 ஊராட்சிகள் உள்ளன. கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் தண்ணீர், மாவட்டத்தில் உள்ள 700- க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க ெதாட்டிகள் சேதம் அடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. சில தொட்டிகள் இடிக்கப்பட்டும் உள்ளன. எனவே கோடை காலத்தில் கருத்தில் கொண்டு, பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இடிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளுக்கு பதிலாக புதிய குடிநீர் தொட்டிகளை கட்டித்தர வேண்டும்.


Next Story