9-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கவுன்சிலர் வலியுறுத்தல்


9-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கவுன்சிலர் வலியுறுத்தல்
x

9-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கவுன்சிலர் வலியுறுத்தல்

திருப்பூர்

ஊத்துக்குளி

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் நேற்று ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது.ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிநாத், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வரும் வளர்ச்சி திட்ட பணிகள் விவாதிக்கப்பட்டது.குறிப்பாக ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது, வடிகால் அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட 9-வது வார்டு கவுன்சிலர் மோகன் சின்னியகவுண்டம்பாளையம் பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து இருப்பதால் அவ்வழியாக அரசு பேருந்து வருவதில்லை எனவும் இதனால் ஊத்துக்குளி பகுதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் எனவே அச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் தொட்டிபாளையம், சாலப்பாளையம் பகுதிக்கு குடிநீர் விநியோகம் சரிவர கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.கூட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்தில் ஓட்டுக்கட்டிடத்தின் மேற் கூரையில் ஏற்பட்டுள்ள பழுதனை சரி செய்வதற்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் தரைதளத்திற்கு பேவர் பிளாக்கல் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் யமுனாதேவி குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது பற்றியும், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, பிறவி குறைபாடு, குழந்தைகளுக்கு மனரீதியான பயிற்சிகள் பற்றியும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும், 18 வயதிற்கு குறைவான பெண்கள் கருத்தரித்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.கூட்டத்தில் கலந்து கொண்ட சமூக நலம் விரிவு அலுவலர் வெங்கடேஸ்வரி கூறுகையில் அரசு பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கி வரும் உதவித்தொகைகள் குறித்தும், இரண்டு பெண் குழந்தை திட்டம் குறித்தும், திருமண உதவித்தொகை, கலப்புத் திருமண உதவித்தொகை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.குழந்தை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த செல்லமணி கூட்டத்தில் கலந்துகொண்டு குழந்தைகள் உதவி மையம் குறித்தும், பெற்றோரை இழந்த குழந்தைகளை படிக்க வைக்க எவ்வாறு உதவ வேண்டும் என்பது குறித்தும் விரிவாக கூறினார்.கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் மரகதமணி, சம்பத்குமார், கல்பனா, யமுனாதேவி, மோகனசுந்தரி, சிவமதி, மோகன், மூர்த்தி, கலைவாணி நடராஜன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

---


Next Story