இலவச பஸ் பயண அட்டை பெற கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்


இலவச பஸ் பயண அட்டை பெற கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்
x

இலவச பஸ் பயண அட்டை பெற கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர்.

திருச்சி

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டையை ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஒரு வருட காலத்துக்கு புதுப்பித்து வழங்கும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் அரங்கத்துக்கு பின்புறம் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்தது. வருகிற 30-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த முகாமில் பார்வையற்றோர், கை கால் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோர் பங்கேற்று இலவச பஸ் பயண அட்டையை புதுப்பித்து கொள்ளலாம். மேலும், புதிய அட்டை வேண்டுபவர்களும் உரிய ஆவணங்களுடன் வந்து விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 2 ஆயிரத்து 51 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story