தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம்


தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம்
x

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது

மயிலாடுதுறை

தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி பொறையாறு மரகத காலனி 17- வது வார்டில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பொன்ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் இளங்கோ வரவேற்று பேசினார். இதில், நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கிராமப்புறங்களில் தூய்மை பணியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். முகாமையொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 2 பிளாஸ்டிக் வாளிகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பை வழங்கப்பட்டது. முகாமில், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், மரகதம் காலனி கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு உறுப்பினர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story