பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகை


பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகை
x

தஞ்சையில் 15-ந் தேதி சுதந்திர தினவிழா கொண்டாட்டப்படுவதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகை நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், ஆக.12-

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தஞ்சை மாவட்டத்திலும் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெறும். இந்த கலைநிகழ்ச்சிக்கான ஒத்திகை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்றுகாலை நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 300 பேர் கலந்து கொண்டு இந்திய பெருமையை பறைசாற்றும் நடனம், வந்தே மாதர பாடல் நடனம், கிராமிய நடனம், செம்மொழி பாடல் நடனம், சுதந்திர தின பாடல் நடனம் போன்ற நடனங்களை ஆடி ஒத்திகை பார்த்தனர்.இதில் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். அதேபோல் சுதந்திர தினவிழாவையொட்டி ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது.


Next Story