நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
செந்துறை, பட்டிவீரன்பட்டி, குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
செந்துறை
நத்தம் அருகே உள்ள செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி செந்துறை, குரும்பபட்டி, களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, மாமரத்துபட்டி, ரெங்கையன்சேர்வைகாரன்பட்டி, திருநூத்துப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, ஒத்தக்கடை, சரளைபட்டி, கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி, பிள்ளையார்நத்தம், மாதவநாயக்கன்பட்டி, கோசுகுறிச்சி, கம்பிளியம்பட்டி, மங்களப்பட்டி, சிரங்காட்டூப்பட்டி, மணக்காட்டூர், அடைக்கனூர், தொண்டபுரி, குடகிப்பட்டி, மந்தகுளத்துப்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதேபோல் நத்தம் அருகே வே.குரும்பபட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோபால்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வார்பட்டி, மருநூத்து, கோணப்பட்டி, சாணார்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, கன்னியாபுரம், எல்லப்பட்டி, மேட்டுக்கடை, காவேரிசெட்டிபட்டி, படுகைக்காடு, வே.குரும்பபட்டி, விளக்குரோடு, ஆவிளிபட்டி, முளையூர், ஒத்தக்கடை, எரமநாயக்கன்பட்டி, சக்கிலியன்கொடை, ராமராஜபுரம் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
பட்டிவீரன்பட்டி
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, சித்தரேவு, எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
குஜிலியம்பாறை
எரியோடு அருகே உள்ள கோவிலூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி ஆர்.கோம்பை, புளியம்பட்டி, வடுகம்பாடி, குஜிலியம்பாறை, ஆர்.புதுக்கோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, கோவிலூர், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிபட்டி, சத்திரப்பட்டி, சின்னலூப்பை, அழகாபுரி, ஆர்.வெள்ளோடு, குவாரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை கோவிலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லை அடுத்த கொசவப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதையொட்டி கொசவப்பட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, தொட்டியப்பட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தம்மாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுபட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடுகாட்டுப்பட்டி, குரும்பபட்டி, கவராயபட்டி, கூவனூத்து ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்தார்.