பிளஸ்-1 மாணவி தற்கொலை


பிளஸ்-1 மாணவி தற்கொலை
x

கே.வி.குப்பம் அருகே பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

கே.வி.குப்பம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா மேல்மாயில் அடுத்த செம்மண்குட்டை பகுதியைச் சேர்ந்த ராமன் மகள் சுமித்ரா (வயது 16). இவர் கே.வி.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவருக்கு உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டு வந்தது. நேற்று உடல்நலப் பாதிப்பு அதிகமாகவே மனவேதனையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித் தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, சுமித்ராவின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story