பிளஸ் -1 மாணவன் மாயம்


பிளஸ் -1 மாணவன் மாயம்
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:47 PM GMT)

பிளஸ் -1 மாணவன் மாயம் போலீசில் தந்தை புகார் அளித்தார்

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே காவாளமேட்டை சேர்ந்தவர் எட்வின்தேவமகன். இவரது மகன் அருள்ராஜ் (வயது 16). இவர் மணல்மேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் - 1 படித்து வந்துள்ளார். பிளஸ்-1 தேர்வு இரண்டு தேர்வுகள் எழுதியிருந்த நிலையில் இவர் படிப்பில் சரிவர கவனம் செலுத்தாததால் பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருள்ராஜ் கடந்த 19-ந் தேதி களத்தூரில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கே வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் அருள்ராஜை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவனின் தந்தை எட்வின்தேவமகன் மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தார். அதன் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story