பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

முன்பருவ தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விமானியாகும் ஆசை நிறைவேறாமல் போய் விடுேமா? என்ற அச்சத்தில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

திருச்சி

முன்பருவ தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விமானியாகும் ஆசை நிறைவேறாமல் போய் விடுேமா? என்ற அச்சத்தில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

பிளஸ்-2 மாணவர்

திருச்சி பஞ்சப்பூர் விநாயகா நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் நவீன் குமார் (வயது 17). பிளஸ்-2 படித்து வந்த இவர் விமானியாக ஆசைப்பட்டு அதற்கு ஏற்றவாறு படித்து வந்தார்.

அதுமட்டுமின்றி நவீன்குமார் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிளஸ்-2 தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளியில் நடத்தப்பட்ட முன்பருவ தேர்வுகளில் நவீன்குமார் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதனால், விமானியாகும் ஆசை நிறைவேறாமல் போய் விடுமோ? என்ற அச்சத்தில் நவீன்குமார் இருந்தார். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான நவீன் குமார் நேற்று வீட்டில் தனியாக இருக்கும் போது, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story