பொய்கை வாரச்சந்தை ரூ.96 லட்சத்துக்கு ஏலம்


பொய்கை வாரச்சந்தை ரூ.96 லட்சத்துக்கு ஏலம்
x

பொய்கை வாரச்சந்தை ரூ.96 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

வேலூர்

அணைக்கட்டு தாலுகா பொய்கை வாரச்சந்தை ஏலம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குமார பாண்டியன், பொய்கை ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.வெங்கடேசன், அலுவலக மேலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 23 பேர் வைப்புத் தொகை செலுத்தி ஏலம்கேட்டனர். லோகநாதன் என்பவர் 80 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டார். இதற்கு 15 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்பட 96 லட்சத்து 1,200 ரூபாய்க்கு ஏலம் போனதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

ஏலம் விடும் தொகையில் சத்தியமங்கலத்திற்கும் நிதி ஒதுக்க வேண்டும் என ஒரு பிரிவினர் கூட்டத்தில் பேசினர். இதற்கு அதிகாரிகள் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்ததால் ஏலதாரர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆவேசமாக பேசினர்.


Next Story