ஈரோட்டில் இன்று நடக்கிறது; 3 மையங்களில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு- 5,920 பேர் எழுத உள்ளனர்


ஈரோட்டில் இன்று நடக்கிறது; 3 மையங்களில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு- 5,920 பேர் எழுத உள்ளனர்
x

ஈரோட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3 மையங்களில் நடக்கும் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வினை 5 ஆயிரத்து 920 பேர் எழுத உள்ளனர்.

ஈரோடு


ஈரோட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3 மையங்களில் நடக்கும் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வினை 5 ஆயிரத்து 920 பேர் எழுத உள்ளனர்.

3 மையங்கள்

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை போலீசார், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வு ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை அருகே உள்ள நந்தா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் கொங்கு என்ஜினீயரிங் கல்லூரி என 3 மையங்களில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வினை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 957 பெண்களும், 4 ஆயிரத்து 963 ஆண்களும் என மொத்தம் 5 ஆயிரத்து 920 பேர் எழுத உள்ளனர். தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.40 மணிக்கு நிறைவடைய உள்ளது.

தீவிர சோதனை

இதில், தமிழ் பாடங்களில் இருந்து 80 வினாக்களும், பொது அறிவில் 70 வினாக்களும் என மொத்தம் 150 வினாக்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணிக்கே நுழைவுச்சீட்டுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என தேர்வாணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர். இதற்கிடையில் நேற்று மதியம் தோ்வு நடக்க தயார் நிலையில் உள்ள மையங்களில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் ஆய்வு செய்தார். தேர்வு நடக்கும் அறைகளில் கண்காணிப்பு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் 600 போலீசார் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story