கூடலூரில் போலீசார் கொடி அணிவகுப்பு


கூடலூரில் போலீசார் கொடி அணிவகுப்பு
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி கூடலூரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.

நீலகிரி

கூடலூர்,

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், பொது இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று கூடலூரில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் முன்னிலை வகித்தார். கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய அணிவகுப்பு ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் அடைந்தது. பின்னர் அங்கிருந்து கோழிக்கோடு சாலையில் சென்று துப்பு குட்டி பேட்டையை அடைந்தது. இதில் 125 போலீசார் கலந்துகொண்டனர்.Next Story