குளித்தலை, சின்னதாராபுரத்தில் போலீசார் கொடி அணி வகுப்பு


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குளித்தலை, சின்னதாராபுரத்தில் போலீசாரின் கொடி அணி வகுப்பு நடந்தது.

கரூர்

கொடி அணி வகுப்பு

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குளித்தலை நகரம் மற்றும் குளித்தலை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் சிலைகள் ஆறு மற்றும் குளங்களில் கரைக்கப்பட உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பாதுகாப்பு பணிக்காகவும் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவற்றை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி குளித்தலையில் நேற்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர் தலைமையில் இந்தக் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. குளித்தலை பெரிய பாலத்தில் இருந்து தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு குளித்தலை நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்றது. இதில் குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பாதுகாப்பு உடையணிந்த சிறப்பு போலீசார், ஊர்காவல்படையினர் பங்கேற்றனர்.

க.பரமத்தி

இதேபோல் க.பரமத்தி அருகே உள்ள சின்னதாராபுரத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. கலவரங்களை தடுக்க பயன்படுத்தும் பாதுகாப்பு உடைகள், பாதுகாப்பு சாதனங்கள் அணிந்து போலீசார் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். சின்னதாரபுரம் நேரு நகரில் தொடங்கிய அணிவகுப்பு முக்கிய வீதிகளான தென்னிலை பிரிவு சாலை, பஸ் நிலையம், எம்.ஜி.ஆர்.நகர் வழியாக சென்று அருங்கரை அம்மன் ஆர்சில் முடிவடைந்தது.


Next Story