சுதந்திர தினத்தையொட்டிரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை


சுதந்திர தினத்தையொட்டிரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
x

சுதந்திர தினத்தையொட்டிரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சுதந்திர தினத்தையொட்டிரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விழாவையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 1,200 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தி, பயணிகளின் உடமைகளை காண்காணித்தனர். ரெயில்வே தண்டவாளங்களில் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் சோதனை நடத்தினர்.

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் அனைத்து பார்சல்களும் கடுமையான சோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டு வருகிறது. ெவளியூர்களில் இருந்து கொண்டுவரப்படும் பார்சல்களையும் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இதுபோல் கன்னியாகுமரி, இரணியல், குழித்துறை, மார்த்தாண்டம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


Next Story