"அரசியல் என்பது எல்லா இடங்களிலும் இருக்கும்" - பி.வி.சிந்து


அரசியல் என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் - பி.வி.சிந்து
x

அரசியல் என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் என்றும், எந்தத் துறையிலும் நம்பர் 1ஆக இருந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது எனவும் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி,

திருச்சி தாயனூர் அருகே தனியார் பள்ளியில் "மீட் தி சாம்பியன்" என்கிற தலைப்பில் நடைபெற்ற விழாவில் பத்ம பூஷன் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பெற்றோர்கள் குழந்தைகள் விரும்பும் விளையாட்டைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் தான் பதக்கங்களை வெல்ல மேற்கொண்ட கடின உழைப்பு குறித்து மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட அவர், இந்தியாவிற்காக மேடையில் நிற்கும் போது தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக பெருமிதம் தெரிவித்தார்.

விளையாட்டை விரும்பும் போது கல்வி பெரிதல்ல என்று கூறுவது தவறு என்று குறிப்பிட்ட சிந்து, கல்வி விளையாட்டு இரண்டுமே முக்கியம் என்று கூறினார். யோகா போன்ற பயிற்சிகளை கண்டிப்பாக மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட சிந்து தொடர்ந்து விளையாட்டுத் துறை அரசியல் குறித்தும் மாணவர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.


Next Story