கோடை பொங்கல் விழா


கோடை பொங்கல் விழா
x
தினத்தந்தி 30 May 2022 6:04 PM GMT (Updated: 31 May 2022 5:30 AM GMT)

கருப்பர்சாமி கோவிலில் கோடை பொங்கல் விழா நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் உள்ள கொக்கன் கருப்பர் சாமி கோவிலில் கோடை பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, நோய்நொடியில் இருந்து பாதுகாத்தது மற்றும் ஆரோக்கியம் போன்ற நேர்த்தி கடனுக்காவும், விவசாயம் செழிக்க வேண்டியும் அ.காளாப்பூர் சுற்றி உள்ள அனைத்து கிராம மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழவும் 5 தலைமுறையினர் இந்த விழாவை நடத்தி வருகின்றனர். பொங்கல் வைத்து சாமிக்கு தீபாராதனை காட்டியவுடன் பெண்கள் சாமிக்கு படைத்த பொங்கலை அனைவருக்கும் பகிர்ந்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை கொக்கன் கருப்பர் சாமி, எட்டு கரை பங்காளிகள் செய்திருந்தனர்.


Next Story