தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்


தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x

தஞ்சை மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் பட்டுவாடா, பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் பட்டுவாடா, பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தஞ்சை கோட்ட தபால் ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழு சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் நேற்று நடைபெற்றது. தபால்துறை பணிகளை தனியாருக்கு கொடுக்கும் பணியை ரத்து செய்யவேண்டும். பழைய ஓய்வூதியதிட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு இலாகா அந்தஸ்து மற்றும் சமூக பாதுகாப்பினை வழங்க வேண்டும்.கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி கருணை அடிப்படையில் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும். தபால் பார்சல் அலுவலகத்தில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்பதை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க கோட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் குணசீலன், பொருளாளர் நீலவண்ணன் யாதவ், நிர்வாகிகள் வைத்திலிங்கம், பஞ்சநாதன், குணசேகரன், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் தபால்துறையின் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் வரதராஜன், மதியழகன், குமார், வாசுதேவன், சிவரத்தினம், சண்முகம், மாநில உதவி தலைவர் சாகுல்அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தபால் பட்டுவாடா பாதிப்பு

இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தால் பல்வேறு தபால் அலுவலகங்களில் பணப்பரிவர்த்தனை மற்றும் தபால் பட்டுவாடா பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story