நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி கோட்டம் பென்னாகரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம் அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைகுளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் கடத்தூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட இருமத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், க.ஈச்சம்பாடி, சொர்ணம்பட்டி, மாவடிபட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், அக்ரஹாரம், முத்தம்பட்டி, மல்லம்மாபுரம், பள்ளம்பட்டி, பெரிச்சாகவுண்டம்பட்டி, காட்டனூர், சொர்ணம்பட்டி, பட்டாகபட்டி, பெரம்மாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கூடுதுறைபட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடமங்கலம், கொன்றம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை தர்மபுரி செயற்பொறியாளர் வரதராஜன், கடத்தூர் செயற்பொறியாளர் ரவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story